செவ்வாய் கிரகத்தில் உயிரினம் உண்டா? இல்லையா?

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் உண்டா இல்லையா என்று இதுவரை உறுதியாக எந்த ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரைகளும் சொல்லவில்லை!

உண்மையில் ம‌ண்ணுக்கும் ம‌னித‌னுக்கும் பெரிய‌ வேறுபாடு ஒன்றுமில்லை. உல‌கிலுள்ள‌ எந்த‌ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ள‌தானாலும் உயிர‌ற்ற‌தானாலும் அவை அணுக்க‌ளாலேயே அக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எல‌க்ட்ரான் என்ற‌ மூன்று பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. இது தான் அணுவின் அமைப்பு. இந்த‌ அணுதான் ம‌ண்ணிலும் இருக்கிற‌து ம‌னித‌னிலும் இருக்கிற‌து. உயிருள்ள‌ பொருளிலும் அதேஅணுதான் உயிர‌ற்ற‌ பொருளிலும் அதே அணுதான். இர‌ண்டுவ‌கை பொருட்க‌ளின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. என்றால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளுக்கும் உயிருள்ள‌ பொருட்க‌ளுக்கும் உள்ள‌ வேறுபாடு என்ன‌? அசைவு. உயிருள்ள‌ பொருட்க‌ள் அசைகின்ற‌ன‌, வ‌ள‌ர்ச்சிய‌டைகின்ற‌ன‌, இன‌ப்பெருக்க‌ம் செய்கின்ற‌ன‌. இதுதான் உயிர் என்ப‌த‌ன் பொருள்.
ஆனால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ள் இதை‌ செய்வ‌தில்லையா? அவைக‌ளும் இதை செய்கின்ற‌ன‌. எப்ப‌டி? த‌ண்ணீர் ஒரு உயிர‌ற்ற‌ பொருள் தான் அதை ஒரு இட‌த்தில் வைத்தால், வைத்த‌ இட‌த்தில் அது அப்ப‌டியே இருக்கிற‌தா? ப‌ள்ள‌மான‌ இட‌த்தை நோக்கி அசைகிற‌து இட‌ம் பெய‌ர்கிற‌து. காற்று உயிர‌ற்ற‌ பொருள்தான் அது அசைவ‌ற்றா இருக்கிற‌து? வெற்றிட‌த்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிற‌து. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சிய‌டைகிற‌து. ஓரிரு மில்லிமீட்ட‌ர்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைகிற‌து. காற்ற‌டைத்த‌ ப‌லூனை லேசாக‌ சூடாக்குங்க‌ள் (ப‌லூனுக்கு பாதிப்பு ஏற்ப‌டாவ‌ண்ண‌ம்) ப‌லூன் வெடித்துவிடும் ஏன்? காற்றான‌து பெருக்க‌ம‌டைகிற‌து. உப்பை எடுத்துக்கொள்ளுங்க‌ள் சோடிய‌ம், ஆக்ஸிஜ‌ன், குளோரின் இந்த‌ மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடிய‌த்தின் ப‌ண்பும் இல்லாத‌, குளோரினின் ப‌ண்பும் இல்லாத‌, ஆக்ஸிஜ‌னின் ப‌ண்பும் இல்லாத‌ சோடிய‌ம் குளோரைடு என்ற‌ புதிய‌ பொருள் அதாவ‌து உப்பு என்ற‌ புதிய‌ பொருள் பிற‌க்கிற‌து. இவைக‌ளெல்லாம் நாம் அன்றாட‌ம் பார்க்கும் விச‌ய‌ங்க‌ள். உயிருள்ள‌வைக‌ளை போல‌வே உயிர‌ற்ற‌வையும் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌.
கீழ்கண்டவாறு  இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்!
1.முதலில் முன்னும் பின்னும் அசையும் உயிரினங்கள்தான் உருவாகியிருக்கும்.
2.அடுத்து முன்னும், பின்னும் ,அந்தப்பக்கமும் இந்த பக்கமும்  அசையும் உயிரினங்கள் உருவாகியிருக்கும்.
3.அப்புறம் முன்னும்பின்னும் ,அந்தப்பக்கம் இந்தப்பக்கம், மேலும் கீழும் அசையக்கூடிய உயிரினங்கள் உருவாகியிருக்கும்.
4. அதற்கு அப்புறம் முன்னும் பின்னும், மேலும் கீழும், அந்தப்பக்கம் இந்தப்பக்கம், அசைவதோடல்லாமல் சுழலும் அமைப்புகளும்  உருவாகியிருக்கும். உதாரணமாக தலை கழுத்தில் இருந்து 180 டிகிரி வரை சுழல்கிறது.  கைளும் கால்களும் 180 டிகிரி வரை சுழல்கின்றன. இ்பபடி சுழலும் அமைப்புக்கள் பெற்ற உயிரினங்கள் உருவாக தொடங்கின. இப்படி நாம் கருத்தில் கொண்டால் அடுதத பரிணாமமாக 360 டிகிரிசுழலக்கூடியதாகவும் , முன்னாடி வேகமாக ஓடுவதைப் போலவே இனி பின்னாடியும் வேகமாகக் ஓடக்கூடிய உயிரினமே இனி உருவாகும் என தெரிகிறது. ஆனால் இந்த மாதிரி உயிரினம் நம் பூமியில் உருவாக வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தில் இத்தகைய உயிரினம் உருவாகி இருக்கலாம். அல்லது இனிமேல் உருவாகலாம்! மேலே சொல்லப்பட்ட பட்டவை அனைத்தும் எனது செந்தக் கருத்துக்களே!
youtube இணையதளத்திலிருந்து வீடியோக்களை டவுண்லோடு செய்வது எப்படி?
Famous Astrologers in Chennai
நான் ஏன் விபச்சாரி ஆனேன்?